சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடரும் – தென்காசி கலெக்டர் அறிவிப்பு

782

சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடரும் – தென்காசி கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.08.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுதலை தடுப்பதற்காக பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மறு உத்தரவு வரும் வரை தடை அமலில் இருக்குமென தெரிவித்துள்ளார்கள்.

அதன்படி தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலமான தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தடை அமலில் இருக்கும்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்தினருக்கும், காவல் துறையினருக்கும் முழு ஒத்துழைப்பு தந்து, குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here