குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்- சரத்குமார் வலியுறுத்தல்

1042

கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குற்றால சீசன் வரும்போதெல்லாம் அப்பகுதி மக்களுக்கு தொழில் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு குற்றால சீசனின் போது ஊரடங்கால் குற்றாலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்ததால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இயல்புநிலை திரும்பி வருவதால், ஆர்ப்பரித்து வரும் நீர்வீழ்ச்சியில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் விடுமுறை நாட்களை செலவிட்டு நீராட விரும்புவதால் சமூக இடைவெளியை கடைபிடித்து, பாதுகாப்பை உறுதி செய்து, குற்றாலத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால் மக்கள் நீராடி மகிழலாம். முக்கியமாக பல மாதங்களாக தொழில், வருமானமின்றி வாடும் வியாபாரிகளின் வேதனையை உணர்ந்திருக்கிறேன் என்ற அடிப்படையில் மீண்டும் அவர்களது தொழில் சீரும், சிறப்புமாக மீண்டெழ தமிழக அரசு உதவ வேண்டும்.

எனவே, தென்காசி மாவட்டம், குற்றால பகுதி மக்களின் வாழ்வாதாரம், சுற்றுலா பயணிகளின் விருப்பம், வருவாய் பெருக்கத்தை கருத்தில் கொண்டு, மக்கள் குற்றாலம் செல்ல முதல்-அமைச்சர் அனுமதி வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


பழைய குற்றால அருவியின் இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
High Quality
Medium Quality
Low Quality

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here