9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவி திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

1880

கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுறறுலாதலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி சுற்றுலாதலங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


அதன் தொடர்ச்சியாக 15.12.2020 முதல் காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் செல்ல அனுமதிகக்கப்படுகிறது.

அவ்வாறு அனுமதிக்கப்படும் பொதுமக்களை ஒழுங்குபடுத்தி அருவிகளில் குளிக்க அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு அருவிக்கும் ஒரு குழு நியமனம் செய்து அக்குழுவின் முடிவின் படி ஒவ்வொரு அருவியிலும் ஒரே சமயத்தில் எத்தனை எண்ணிக்கையிலான ஆண் மற்றும் பெண் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்களோ அதன் அடிப்படையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சுற்றுலாதலங்களுக்கு செல்லும்போது தவறாது முகக்கவசம் பயன்படுத்த வேண்டும். மேலும் சுற்றுலா தலத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் சுகாதாரமும், பாதுகாப்பும் முதன்மையானது என்பதால் அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் குறைந்தபட்சம் 2 மீட்டர் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து அருவிகளுக்கு வருவதையும் அருவிகளில் இருந்து நோய்கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

ஒரு முறை பயன்படுத்தபட்ட தட்டு, டம்ளர், தண்ணீர்பாட்டில், உள்ளிட்ட அனைத்தையும் அதற்கான அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் போடவேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்யவும், எப்பொழுதும் சமூக இடைவெளியை பின்பற்றவும், தனியார் விடுதியில் தங்கும் சுற்றுலா பயணிகள் கதவுகளை அடைத்து வைத்திருக்கவும், அருவிப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தவறாது கிருமிநாசினி பயன்படுத்தவும், கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அருவிகள் மற்றும் இதர சுறறுலா இடங்களுககு வரும் சுற்றுலாப் பயணிகள் மாவட்ட நிருவாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள மேற்கண்ட அரசின் அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றிட தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிக்க: அருவியில் குளிப்பதன் மூலம் கொரோனா பரவுமா?

தென்காசி மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here