பாளை நுண் உரம் செயலாக்க மையத்தில் தேனீ வளர்ப்பு துவக்கம்

440

பாளை மண்டலம் மகாராஜநகர் மற்றும் கேடிசி நகரில் உள்ள நுண் உரம் செயலாக்க மையங்களில் தேனீ வளர்ப்பு பணிகள் துவங்கியுள்ளதை உதவி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நெல்லை மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து நுண் உரம் செயலாக்க மையங்களில் மரங்கள் மற்றும் காய்கறிகள் வளர்ப்பு திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆணையாளர் கண்ணன் துவக்கி வைத்தார்.

தேனீ-வளர்ப்பு

இதையடுத்து அவரது உத்தரவின் பேரிலும், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனை பேரிலும், பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மூலம் குப்பைகளை உரமாக மாற்றி காய்கறி, பூக்கள் தோட்டம் அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பாளை மகாராஜ நகர் வேலவர் காலனி மற்றும் பாளை கேடிசி நகர் நுண் உரம் செயலாக்க மையங்களில் பேட்டிகள் வைக்கப்பட்டு தேனீ வளர்ப்பு பணிகள் துவங்கின .
இப்பணிகளை பாளை மண்டல உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Bees in a beehive on honeycomb

இதில் தலா ஒரு பெட்டி வகையில் 10 ஆயிரம் தேனீக்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப் பட்டுள்ளன.
இதில் இருந்து நாட்களுக்கு பின்னர் இரு பெட்டிகளிலுள்ள தேனீக்கள் மூலம் தலா இரு லிட்டர் தேன்கள் கிடைக்க உள்ளதாகவும் , இச்சோதனை வெற்றி பெற்றதும் மாநகராட்சியிலுள்ள நுண் உரம் செயலாக்க மையத்தில் தேனீக்கள் வளர்ப்பில் பயிற்சி பெற்ற மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 20 பேர் பல்வேறு பகுதிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

beefarm
beefarm

இதற்கான பயிற்சியை கிள்ளிகுளம் வேளாண் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி வழங்கியுள்ள நிலையில் தேனீ வளர்ப்பு திட்டம் இன்னும் ஓரிரு மாதங்களில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு விரிவுப்படுத்த உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here