பிரதோஷத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இன்று (29ம் தேதி) மாலை மணி முதல் சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆனால் இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதாவது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிரதோஷ காலத்தில் நடைபெறும் அபிஷேகம், பிரதோஷ தீபாராதனை மற்றும் பிரதோஷ சுற்றில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை.
பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனம் செல்ல அமைக்கப்பட்டுள்ள வரிசை மூலமாக சமூக இடைவெளியுடன் நின்று ஸ்ரீபலிநாதர் சுற்றி வரும்போது தரிசனம் செய்யவும், பிரதோஷ தீபாராதனை முடிந்தவுடன் பக்தர்களை சந்நிதிக்குள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.
பக்தர்கள் அனைவரும் ஒத்துழைக்கும்படி கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.