
தென்காசி: | Jan 21 | திராவிட மாடல் அரசு மக்களின் பக்தி உணர்வை மதிக்கும் வகையில் அறுபடை வீடு ஆன்மிக இலவச சுற்றுலா திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.
2014 தமிழக பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மாவட்டம் தோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவசமாக அழைத்துச்செல்லப்படுகின்றனர்.
இத்திட்டத்தில் சென்னை, பழனியில் இருந்து 410 பேர் அழைத்து செல்லப்பட்டனர்.
மூன்றாவதாக இன்று திருச்செந்தூரில் இருந்து அறுபடை வீடு ஆன்மிக இலவச சுற்றுலா துவங்கியது.
இதில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 207பேர் பங்கேற்றனர்.
செந்தூர் முருகன் ஆலயம் கந்தன் விடுதியில் அறுபடை வீடு ஆன்மீக இலவச சுற்றுலா பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
இவர்களுக்கு போர்வை, துண்டு, சோப்பு, ப்ரஸ் உள்ளிட்ட அடிப்படை பொருட்களடங்கிய இலவச பயணப்பை வழங்கப்பட்டது. இவர்கள் அறுபடை வீடு சுற்றுப்பயணம் முடித்து 24ம் தேதி திரும்புவர்.