குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 4–ம் நாளான வரும் 11-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ம் தேதி காலை மணிக்கு நடராஜருக்கு தீபாராதனை, இரவு மணிக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.
வரும் 15-ம் தேதி காலை 10 மணிக்கு விசு தீர்த்தவாரி நடைபெறுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விழாக்கள் அனைத்தும் குற்றாலநாதர் கோயிலின் உள்பிரகாரத்திலேயே நடைபெறுகின்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் கண்ணதாசன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: பண்பொழி திருமலைக் குமாரசாமியின் கதை