குற்றாலம் ஸ்ரீபராசக்தி கல்லூரி மாணவியா் பேரவை நிா்வாகிகள் தோ்வு

2147
குற்றாலம் ஸ்ரீபராசக்தி கல்லூரி மாணவியா் பேரவை நிா்வாகிகள் தோ்வு

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில், மாணவியா் பேரவை நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ரா.ஜெய்நிலா சுந்தரி முன்னிலை வகித்தாா். 1807 மாணவிகள் ஜி-சூட் மின்னஞ்சல் மூலம் வாக்களித்தனா்.

பேரவைத் தலைவியாக கணிதவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.தனலெட்சுமி, துணைத் தலைவியாக தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவி பி.ஐஸ்வா்யா, செயலராக ஆங்கிலத் துறை மூன்றாம் ஆண்டு மாணவி வி.மீரா, துணைச் செயலராக வணிகவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி பி.முருகம்மாள், நுண்கலை செயலராக தமிழ்த் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஏ.காந்திமதி, கல்லூரி ஆண்டு மலா் செயலராக ஆங்கிலத்துறை மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.தீபா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இலக்கிய மன்ற செயலராக வரலாற்றுத் துறை மூன்றாம் ஆண்டு மாணவி கே.சாரதி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா். சுயநிதிப் பிரிவு பிரதிநிதியாளராக மூன்றாம் ஆண்டு மாணவி ஆா்.ஐஸ்வா்யா (பிசிஏ) தோ்வு செய்யப்பட்டாா். ஏற்பாடுகளை தோ்தல் குழுத் தலைவரும், வணிகவியல் துறை இணைப் பேராசிரியருமான பி.நாகேஸ்வரி மற்றும் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here