15 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோவில் கைது!

834

தென்காசியில் 15 வயது சிறுமியை காதலித்து தவறாக நடந்துகொண்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த வேலு சுப்பிரமணியன்@ மணி (21) என்ற நபர் அடிக்கடி பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதனால் அந்த சிறுமியும் அந்த நபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தனக்கு சாப்பாடு கொண்டு வருமாறு அந்த சிறுமியை வரச்சொல்லி, உன்னை நான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி அந்த சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சரஸ்வதி விசாரணை மேற்கொண்டு வேலு சுப்ரமணியன்@மணி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதையும் படிக்க: சிவகிரியில் ஆடுகளை திருடிய மூவர் கைது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here