தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலையணை பகுதியில் வசித்து வரும் 40 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களின் குடும்பத்தினருடன் இன்று (08.11.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS அவர்கள் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சமத்துவ தீபாவளியைக் கொண்டாடினார்..
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரிசி, இனிப்பு வகைகள், உடை போன்றவற்றை மலைவாழ் மக்களுக்கு வழங்கினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் மலைவாழ் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில் உங்களுடன் எனது குடும்பத்துடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுவது மிகவும் மன மகிழ்ச்சியாகவும், புதுவிதமான அனுபவமாகவும் உள்ளதாக கூறினார்.
பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் மலைவாழ் மக்களுக்கும் மதிய உணவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிமாறினார். இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு அந்தோணி உதவி ஆய்வாளர் திரு. சண்முகவேல் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது குடும்பத்துடன் தங்கள் பகுதிக்கு வந்து சமத்துவ தீபாவளி கொண்டாடியது இதுவே முதல்முறை இது தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க: தென்காசி: ஊர்காவல் படை பிரிவில் பணியாற்ற அழைப்பு..