பறவைகளின் பாதுகாவலர் பால்பாண்டி – மனிதம் போற்றும் மகத்தான மனிதர்

1242
மனிதம் போற்றும் மகத்தான மனிதர்
மனிதம் போற்றும் மகத்தான மனிதர்

கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சரணாலயம்.ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் இங்கே வந்து தங்கி கூடுகட்டி குஞ்சுகள் பொரித்து அவைகளை கூட்டிச் செல்கின்றன.கூட்டிலிருந்து தவறி தரையில் விழும் குஞ்சுகளை பறவைகள் சேர்த்துக் கொள்வதில்லை.

மனிதம் போற்றும் மகத்தான மனிதர்
மனிதம் போற்றும் மகத்தான மனிதர்

அப்படி தவறி விழும் குஞ்சுகளை ஒரு தாய்ப்பறவையைப் போல் அரவணைத்து உணவூட்டி அவைகள் பறப்பது வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து அனுப்பி வைக்கும் வேலையை பல்லாண்டுகளாக செய்து வருபவர் பறவைகளின் பாதுகாவலர் பால்பாண்டி.
‌முறையான சம்பளமோ போதிய அங்கீகாரமோ இல்லாத போதும் அதை தன் வாழ்நாள் கடமையாக செய்துவரும் பால்பாண்டியை பாராட்டி கௌரவிக்கும் விதமாக வருகிற 19.11.2020 வியாழக்கிழமை நெல்லையில் உள்ள பிரபல பெல் நிறுவனமும் அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவளப் பாதுகாப்பு மையமும் சேர்ந்து பால்பாண்டிக்கு விருது கொடுத்து கௌரவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here