தென்காசியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் – கலெக்டர் வழங்கினார்
தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி தென்காசி 9வது வார்டுக்குட்பட்ட நகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வழங்கினார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டது.
இ-சஞ்சீவினி ஓபிடி மருத்துவ ஆலோசனை திட்டம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகன ஊர்தி பயணத்தையும் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் சிவலிங்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா, தென்காசி நகராட்சி ஆணையாளர் ஹசினா பேகம், வட்டார மருத்துவ அலுவலர் இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் வீடு, வீடாகச் சென்று சுகாதார பணியாளர்கள் மூலம் 1 முதல் 14 வரையுள்ள 3 லட்சத்து 60 ஆயிரத்து 525 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை (அல்பென்டாசொல்) வழங்கப் பட உள்ளது. நேற்று முதல் 19 ம் தேதி வரை முதற்கட்டமாகவும்,
21 ம் தேதி முதல் 26ம் தேதி வரை 2ம் கட்டமாகவும் இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது.