பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவதை தவிர்த்து, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்ய, துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் சுழற்சி முறையில் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, வருகிற 5-ம் தேதி ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை நேரில் பெற்றுக்கொள்கிறார். கடந்த வாரங்களில் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்கிறார்.
மேலும் 9443620761 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவும் collector.grievance@gmail.com என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவும், https://gdp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் மனுக்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், திருமணமாகாத பெண்கள் ஓய்வூதியம், உழவர் பாதுகாப்பு ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் உள்ளிட்ட 8 ஓய்வூதிய திட்டங்களுக்கான விண்ணப்பங்களை இனி http://edistricts.tn.gov.in:8443/certificates-csc என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியம் பெற விண்ணப்பங்களை நேரில் வழங்குவதை தவிர்த்து, அருகில் உள்ள
அரசு இ-சேவை மையங்களை அணுகி விண்ணப்பித்து பயன் பெற வேண்டும் என ஆட்சியர் தெரவித்துள்ளார்.