சென்னை எழும்பூர் – செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க தமிழக அரசு கோரிக்கை!

745
சென்னை எழும்பூர் – செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க தமிழக அரசு கோரிக்கை!

சென்னை எழும்பூர் – செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்குமாறு ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னை – கன்னியாகுமரி, சென்னை-தூத்துக்குடி, சென்னை-மேட்டுப்பாளையம், சென்னை எழும்பூர் – செங்கோட்டைக்கு ரயில்கள் இயக்குமாறு கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கும் ரயில்கள் இயக்க தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, வரும் 7 ஆம் தேதி மாநிலத்திற்குள் ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான டிக்கெட் முன்பதிவுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ரயில்வே ஊழியர்கள் கணிணி பிரிண்டர் உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்திற்கு கூடுதல் ரயில்களை இயக்குமாறு ரயில்வே வாரியத்திற்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து 4 சிறப்பு ரயில்களும், சென்னை எழும்பூரில் இருந்து 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னை – மதுரை இடையே பாண்டியன் விரைவு ரயிலும், சென்னை – கோவை இடையே சேரன் விரைவு ரயிலும், கன்னியாகுமரி விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், நீலகிரி விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

ஏற்கனவே 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் தற்போது கூடுதலாக 6 சிறப்பு ரயில்கள் இயக்க தமிழக அரசு வேண்டுக்கோள் விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here