தென்காசி மாவட்டத்திலுள்ள மொத்தம் 895 கிராமங்களுக்கும் கிராமத்திற்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் கிராம காவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து தீர்வு காணவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் அறிவுறுத்தியதின் பேரில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெறப்பட்ட புகார் மனுவினை நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை செய்து பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கினர்.
அதிகாரிகள் தங்களின் பகுதிகளுக்கு நேரில் வந்து புகார் மனுவின் மீதான விசாரணை செய்து உடனடி தீர்வு வழங்குவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.
புளியங்குடி உட்கோட்டத்தில் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவில் உதவி ஆய்வாளர் காசி விசுவநாதன் நேரடியாக சென்று புகார் மனுவின் மீது விசாரணை செய்து தீர்வு வழங்கினார்.
வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்மர் கோவில் தெரு மற்றும் தேசியம்பட்டியில் உள்ள கருப்பன் கோவில் தெரு பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் மகாலிங்கம் நேரடியாக சென்று பெறப்பட்ட புகார் மனுகள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு வழங்கினார்.
கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரு பகுதியில் உதவி ஆய்வாளர் விஜயகுமார் நேரடியாக சென்று புகார் மனுகள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு வழங்கினார். சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேர்ந்தமரம் மற்றும் கடம்பன்குளம் பகுதியில் பெறப்பட்ட புகார் மனுகள் மீது உதவி ஆய்வாளர் தினேஷ் பாபு பெறப்பட்ட புகார் மனுகள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு வழங்கினார்.
சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புன்னையாபுரம் எலுமிச்சை சந்தை பகுதிக்கு உதவி ஆய்வாளர் வேல் பாண்டியன் நேரில் சென்று பெறப்பட்ட புகார் மனுவின் மீது விசாரணை செய்து தீர்வு வழங்கினார். திருவேட்டநல்லூர் பகுதியில் பெறப்பட்ட புகார் மனு மீது தலைமை காவலர் மாரியப்பன் நேரில் சென்று விசாரணை செய்து தீர்வு வழங்கினர்.
இதையும் படிக்க: சபாஷ் போடவைத்த செங்கோட்டை போலீசார்!