தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் நிலைக்காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை 14 தேர்வு மையங்களில் மொத்தம் 15,547 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
நடைபெறவுள்ள தேர்வு குறித்து துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தேர்வு நடைமுறைகள் குறித்தும்,தேர்வு மையங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும்,கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
தேர்வு மையம் விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும்.