புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு விவசாய மாமேதை விருது வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமி. இவர் 150 ஏக்கருக்கும் மேல் இரசாயன உரம் அறவே நீக்கி இயற்கை உரங்களான மாட்டுசானம், வேப்பம் புண்ணாக்கு, கோமியம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி கரும்பு, நெல், எள், காய்கறிகள், எலுமிச்சை போன்ற பல்வேறு பயிர்களை பயிரிட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார் .
இவர் இயற்கை விவசாயத்திற்காக பல்வேறு விருதுகள். பாராட்டுக்களை பெற்றுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தை தலைமையிடமாக் கொண்டு செயல்படும் 25 நாடுகளுக்கு மேல் கிளைகள் உள்ள, சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் இயற்கை விவசாயி அந்தோணிச்சாமிக்கு விவசாய மாமேதை விருது என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதினை அந்த நிறுவனத்தின் தென்மண்டல் பகுதி தலைவர் காளித்துரை, மற்றும் செய்யது அகமது ஆகியோர் வழங்கினர்.
இதையும் படிக்க: கானுயிர் காதலி: நெல்லைக்கு பெருமை சேர்க்கும் ஸ்ரீதேவி!