
சிற்றாறு கடனாநதி நுண் நீர் பாசன திட்டத்திற்கு ரூ 34 லட்சம் ஒதுக்கீடு
சிற்றாறு கடனாநதி நுண் நீர் பாசன திட்டத்திற்கு ரூ 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்ட தோட்டக்கலைத்துறையின் மூலமாக காய்கறிப்பயிர்களான வெண்டை, தக்காளி, முருங்கை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களின் பரப்பு விரிவாக்கம் செய்ய ம் நிதியாண்டில் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
மேலும் பயிர் செய்து வரும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு ஹெக்டேருக்கு 2500 வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தவிர சிற்றாறு, கடனாநதி, உபவடி நிலப் பகுதிகளில் நுண் நீர்ப் பாசன திட்டம் மூலம் விவசாயிகள் பயன்பெற ரூ 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் உடனடியாக தங்களது கணினி சிட்டா, ஆதார் கார்டு, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் அருகேயுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.