தென்காசி மாவட்டத்தில் 100% கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் குறித்து புகார் கொடுக்கலாம்
தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளில் 100 சதவீத கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்டவாறு பொதுமக்கள் மற்றும் பெற்றோர் புகார் தெரிவிக்கலாம்.
குறிப்பாக இதுகுறித்து complaints.ceotenkasi@gmail.com மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.