சிவகிரியில் 28-ம் தேதி குறைதீர் கூட்டம்
தென்காசி ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை 9443620761 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவும், collector.grievance@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும், https://gdp.tn.gov.in என்ற இணையதளத்திலும் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புகார் மனுக்களை கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்துக்கும் துணை ஆட்சியர் அளவிலான அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
மனுக்கள் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து திங்கள்கிழமைதோறும் துணை ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன்றனர்.
வருகிற 28-ம் தேதி சிவகிரி தாலுகா அலுவலகத்தில் வைத்து மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு மேற்கொள்கிறார். மேலும் சிவகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக்கொள்கிறார்.
தென்காசி சிட்டி நியூஸ் நாளிதழை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்..
Tenkasi City News 1-4 26.09.2020
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து திங்கள்கிழமைகளில் மனு அளிப்பதற்கு பதிலாக வட்டாட்சியர் அலுவலகங்களில் மனுக்களை அளிக்க வேண்டும்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.