திருநெல்வேலி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி- 13, அம்பாசமுத்திரம்- 7,மானூர்- 2, நாங்குநேரி- 5, பாளையங்கோட்டை- 7, வள்ளியூர்- 3, சேரன்மகாதேவி- 2, களக்காடு- 9.மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,101 ஆக உள்ளது.அதில் 12,085 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 817 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,523 ஆக உயர்ந்துள்ளது. நேற்று63 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,054 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 324 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 2 பேர் உயிரிழந்தனர். இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,753 ஆக அதிகரித்துள்ளது. நேற்று56 பேர் உட்பட இதுவரை 13,087 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 543 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 13,227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 98 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. மொத்தம் 12,170 பேர் குணமடைந்துள்ளனர். மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிக்க: குழந்தைகள் விளையாட தனி அறை – அசத்திய தென்காசி மகளிர் காவல்நிலையம்