திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு, மீட்பு பணிகள் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமையில், உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் ஒருங்கிணைப்பில், இரு மாவட்டங்களிலும் உள்ள 15 தீயணைப்பு நிலைய அலுவலர்கள் பங்கேற்ற இந்த பயிற்சி முகாமில் 20 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டும் மற்றும் இதர பேரிடர் காலங்களில் தீயணைப்புத்துறையோடு இணைந்து எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டது. தீ விபத்து காலங்களில் அந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் தீயணைப்பு துறைக்கு எவ்வாறு உதவி புரிய வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டது.
மழை வெள்ளக் காலங்களில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்களை மிதவைப் பொருட்களாக மாற்றி மனிதர்களை மீட்பது, உயரமான மற்றும் தாழ்வான இடத்தில் உள்ளவர்களை கயிறு மூலம் மீட்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை எலும்பு முறிவு அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் பிரேம் நிவாஸ் தனது குழுவினருடன், விபத்து நிகழ்ந்த இடத்தில் முதல் உதவிகள் வழங்குவது பற்றி செய்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளித்தார்.
இதையும் படிக்க: தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் கிராமக் காவலர்கள்: புகார்கள் மீது நேரில் சென்று விசாரணை