தென்காசி மாவட்டம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு!

கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் நாளை ஞாயிற்றுக்கிழமை எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. கிராமப்புறங்களிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜூலை 31 வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதுடன், இம்மாதத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால் கடை, மருந்தகங்கள் மட்டுமே இயங்கும். மருத்துவமனைகள், அவசர ஊர்தி மருத்துவ வசதிகளுக்கு தனியார் வாகனங்கள் இயக்கவும் அனுமதிக்கப்படுகிறது,

மதுபானக் கடைகள் இயங்காது. காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். மக்களும் வெளியே வரக்கூடாது. தடையை மீறி, காலை, மாலையில் நடைபயணம் மேற்கொண்டால், வாகனங்களில் சுற்றினால், வழக்குப்பதிந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here