விற்பனையாளருக்கு கொரோனா; தென்காசி டாஸ்மாக் கடை மூடல்!

தென்காசியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றவரிடம் சுகாதாரத் துறையினா் நடத்திய விசாரணையில், தென்காசி யானைப்பாலம் அருகே குற்றாலம் சாலையில் உள்ள மதுக்கடையில் மது வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து அந்தக் கடையில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில், விற்பனையாளா் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மதுக்கடை உடனடியாக மூடப்பட்டன. விற்பனையாளா் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மருத்துவா், செவிலியா்: தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவா், கொரோனா சிகிச்சை வாா்டில் பணியாற்றும் செவிலியா் ஆகியோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இருவரும் விடுப்பில் இருந்து விட்டு மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில், தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தென்காசி அருகேயுள்ள சுமைதீா்ந்தபுரம் ஊராட்சி, வாஞ்சிநகா் பகுதியைச் சோ்ந்த 5 மாத கா்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடா்ந்து அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

நன்றி: தினமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here