
தென்காசி மாவட்டத்தில் நாளை 3 தேர்வு மையங்களில் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஏ.வி.கே.இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, சங்கரன்கோவில் வெல்ஸ் பப்ளிக் பள்ளி, இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா ஆகிய 3 தேர்வு மையங்களில் நீட் நுழைவுத்தேர்வு நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் 17 மையங்களில் நடக்கிறது.
தென்காசி மற்றும் தென்காசி ஆகிய இரு மாவட்டங்களிலும் மொத்தம் 20 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது. இதில் 7460 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளார்கள்.
தேர்வு நாளன்று தடைபடாத மின்சாரம் வழங்கவும், பேருந்துகளை தேர்வு மையத்திற்கு கூடுதலாக இயக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையத்தின் அருகாமையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு அறையினுள் செல்போன்களை எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வு எழுதுபவர்கள் தவிர இதர நபர்கள் தேர்வு மைய வளாகத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தென்காசியில் அமைகிறது பறவைகள் சரணாலயம்!