பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, தங்கள் புகார்களை 9443620761 என்ற எண்ணில் வாட்ஸப் மூலமாகவும், collector.grivance@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே, பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, தங்கள் புகார்களை 9443620761 என்ற எண்ணில் வாட்ஸப் மூலமாகவும், collector.grivance@gmail.comஎன்ற இ-மெயில் மூலமாகவும் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புகார் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்துக்கும் துணை ஆட்சியர் நிலையிலான ஓர் அலுவலர் வட்டக் குறைதீர்க்கும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை https://gdp.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
தங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பொது இ-சேவை மையங்களில் அதற்குரிய கட்டணமாக ரூ.10 மட்டும் செலுத்தி குறைதீர்க்கும் நாள் மனுக்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
அவ்வாறு பெறப்படும் மனுக்கள் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த வட்டத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு துணை ஆட்சியாளர்களால் அனைத்து அலுவலர்களுடன் கலந்தாலோசித்து, பெறப்பட்ட மனுக்கள் உரிய முறையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
1. ஆலங்குளம் வட்டம்- உதவி ஆணையர் (கலால்) 9443620562.
2. கடையநல்லூர் வட்டம்- கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) 9443620457.
3. சங்கரன்கோவில் வட்டம்-தனித்துணைஆட்சியர் (ச.பா.தி) 9443620712.
4. செங்கோட்டை வட்டம்- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் 9443620492.
5. சிவகிரி வட்டம்- மாவட்ட வழங்கல் அலுவலர் 9443620387.
6. தென்காசி வட்டம்- வருவாய் கோட்டாட்சியர் (தென்காசி) 9443621726.
7. திருவேங்கடம் வட்டம்- வருவாய் கோட்டாட்சியர் (சங்கரன்கோவில்) 9443620356.
8. வீரகேரளம்புதூர் வட்டம்- மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் 9443620138.
இவ்வாறு ஆட்சியர் கூறியுள்ளார்.