தென்காசி: காய்கறி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ரூ 2,500 ஊக்கத்தொகை

1312

காய்கறி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ரூ 2,500 ஊக்கத்தொகை

தென்காசி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ. ஊக்கத்தொகைவழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்துக்கு ரூ. 27.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெங்காயம், தக்காளி, கீரை வகைகள், முருங்கை, வெண்டை, கத்திரி, அவரை மற்றும் பந்தல் வகை காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் விண்ணப்பித்து பயனைடையலாம்.

மேலும், நீர்வள நிலவள திட்டத்தில் சிற்றாறு, கீழ் தாமிரபரணி மற்றும் கடனா நதி உப வடிநிலப் பகுதிகளில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஊக்கத்தொகை வழங்க 400 ஹெக்டேருக்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தென்காசி சிட்டி நியூஸ் நாளிதழை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்..

Tenkasi City News 1-4 26.09.2020

இத்திட்டங்களில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், கணினி பட்டா, வி.ஏ.ஓ அடங்கல், வங்கி புத்தக நகல், காய்கறி பயிரிட்ட தோட்டத்தின் புகைப்படம், காய்கறி விதை அல்லது நாற்று வாங்கிய ரசீது ஆகிய
ஆவணங்களுடன் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில்
விண்ணப்பித்து பயன்பெறலாம் என, தென்காசி மாவட்ட தோட்டக்கலைத் துணை இயக்குநர் ஜெயபாரதிமாலதி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here