‘நான் ரொம்ப சென்சிடிவ்’ – கல்யாணி பிரியதர்ஷினி ஓபன் டாக்

284
‘நான் ரொம்ப சென்சிடிவ்’ – கல்யாணி பிரியதர்ஷினி ஓபன் டாக்

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி ஆனவர் கல்யாணி பிரியதர்ஷினி. தற்போது சிம்புவுக்கு ஜோடியாக ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஜொலிப்பாரா கல்யாணி? அவரிடமே கேட்கலாம்…

உங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே சினிமா துறையில் (மலையாளம்) இருந்ததனால, உங்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு ஈஸியா கிடைச்சுருச்சுனு நம்புறீங்களா?

என்னோட அப்பா பிரியதர்ஷன் மலையாளத்தில் பிரபலமான சினிமா இயக்குனர்; அம்மா லிஸி லக்ஷ்மி மலையாளத்தில் மூத்த நடிகை. நான் சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள வர்றதுக்கு முன்னாடியே, அப்பா-அம்மா நான் சினிமா இண்டஸ்ட்ரி தான் என்னோட விருப்பம் தெரிஞ்சு வச்சிருந்தாங்க. நான் சினிமா துறைக்கு தான் வருவேன்னு அவங்க எனக்கு முன்னாடியே கண்டுபிடிச்சுட்டாங்க. ஆனா அவங்க என் கிட்ட நேரடியா இதப்பத்தி ஏதும் சொன்னது இல்லை.

நான் ரொம்ப சென்சிடிவ். சாதாரண ஒரு விமர்சனம் கூட என் மனசுல ஆழமா பதிஞ்சுரும். நான் நடிக்க வரணும்னு நினைக்கலனாலும், சினிமா துறையில் எனக்கு ஆர்வம் இருந்தது. கேமராவுக்கு பின்னால் இருந்து ஒர்க் பண்ணத்தான் ஆசைப்பட்டேன். அமெரிக்காவில் டிசைனிங் முடிச்சிட்டு, ‘இருமுகன்’, ‘க்ரிஷ் 3’ படங்கள்ல அசிஸ்டெண்ட் ப்ரொடக்ஷன் டிசைனரா ஒர்க் பண்ணேன்.

சினிமா இண்டஸ்ட்ரில உள்ளவங்களோட வாரிசுகளுக்கு ஈஸியா சான்ஸ் கிடைச்சுரும்னு நினைக்கிறீங்க, ஆனா அது அப்படியில்லை. அதேசமயம் அப்பா-அப்பா பெயர காப்பாத்தணும் என்கிற ஒரு அழுத்தம் இருக்கும். அதுக்காகவே கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.

நான் நடிக்கிற படங்களின் கதைய நானேதான் கேட்பேன். தேர்வு பண்ணலாமா வேண்டாமா என்கிறதையும் நானேதான் முடிவு பண்றேன். அப்பாவும் அம்மாவும் எதிலும் தலையிடுறதில்ல. அப்பா என்னோட விமர்சகர். அம்மா என்னோட ரசிகை. அவ்வளவுதான். பிரபலத்தின் வாரிசு என்கிற முத்திரைய என்னோட திறமையை கொண்டு நிச்சயம் முறியடிப்பேன்.

அப்பா சொன்ன டிப்ஸ் என்ன?

‘உன்னோட திறமையை மட்டுமே நீ நம்பனும்’னு அப்பா சொன்னார். அப்படி நம்பினதால நான் இங்க இருக்கிறேன். ஒரு இயக்குனர் சொல்றத அப்படியே நம்பனும்னு அப்பா சொல்வார். அதுதான் என்னோட தாரகமந்திரம்.

படத்தில் அதிக நேரம் வர்றது முக்கியம் இல்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு பண்ணணும். டைரக்டர் கதை சொல்ல வரும்போது, உன்னோட கேரக்டர் என்ன என்கிறத மட்டும் தெரிஞ்சிட்டு நடிக்கிறதுக்கு பதிலா, முழு கதையையும் அவர்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிறனும் அப்பா சொல்வார். அப்போதான் படத்துல என்னோட பங்கை புரிஞ்சிக்க உதவியா இருக்கும். நடிகைகளை பொறுத்தவரை நல்ல படமும், நடிப்பும் மட்டுமே அவர்களை மக்கள் மனதில் இடம்பிடிக்க உதவும்.

நாம எவ்வளவு நேரம் அதில் நடிச்சிருக்கிறோம் என்கிறத பொறுத்து இல்ல. கதைக்கு சம்பந்தமில்லாம 20 நிமிஷம் படத்துல நடிக்கிறத விடவும், கதையில் முக்கியமான கேரக்டர்ல 2 நிமிஷம் வர்றது பெஸ்ட். தமிழ் மற்றும் மலையாள படங்களை பார்த்து வளர்ந்ததால், தமிழிலும், மலையாளத்திலும் நடிக்கவே ஆசைப்படுறேன்.

நடிக்கும்போது நிறைய ‘டேக்’ எடுக்கிறீங்களாமே?

கேமரா முன்னாடி நடிக்கும்போது வர்ற ஒரு தயக்கத்தை எப்படி சரி செய்யணும் என்கிறதே இப்போ என் மனசுல இருக்கிற ஒரே விஷயம். டைரக்டர்கிட்டயிருந்து ‘ஆக்ஷன்’ என்ற வார்த்தையை கேட்டவுடனே நான் மெய் மறந்து போயிடுறேன். ஆனால் கேமரா இல்லனா நல்லா நடிக்க வருது. நடிகர் மோகன்லால் சார் கூட ஆரம்ப காலத்தில் கேமராவின் முன்பு நடிக்க கஷ்ட்டப்பட்டார்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதனால படங்கள் நடிக்க நடிக்க கேமரா முன்பு சரளமாக நடிக்க வந்துரும்னு நம்புறேன்.

தமிழ் நல்லா பேசுறீங்க. பிறகு எதுக்கு ‘ஹீரோ’ படத்துல டப்பிங் வாய்ஸ்க்கு மாறினீங்க?

நல்லா தமிழ் பேசினாலும், டப்பிங் டெஸ்ட் சரியா வரல. என்னோட வாய்ஸ்ல இருந்த சின்ன தடுமாற்றம், அந்த போல்ட் ஆனா கேரக்டர்க்கு பொருந்தல. அதனால இயக்குனரும், நானும் டப்பிங் பண்ற முடிவுக்கு வந்தோம். பாடகி சின்மயி எனக்கு டப்பிங் பேசினாங்க. அவங்களுடைய வாய்ஸ் அந்த கேரக்டர்க்கு ரொம்ப பொருத்தமா வந்திருந்தது. நானே பேசியிருந்தா கூட இவ்வளவு நல்லா வந்திருக்குமான்னு தெரியல.

உங்க அப்பா – அம்மா விவகாரத்து ஆனது உங்கள பாதிச்சதா?

பின்னே இருக்காதா? எந்தவொரு பிள்ளைக்கும் அதுவொரு மனக்கஷ்டமான விஷயம். அப்பா – அம்மா பிரிந்தது ஒரு பெரிய துரதிஷ்டம். ஆனால் அவங்களுக்குள்ள இருந்த கோபத்தையோ போராட்டத்தையோ பிள்ளைகளான எங்ககிட்ட காண்பிச்சது இல்ல. அவங்களுக்குள்ள எது நடந்தாலும், அது வீட்டிற்கு வெளியே போகாமா பார்த்துக்கிட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சத எதிர்பார்க்கலனாலும், இன்னைக்கு நாங்க எல்லோருமே சந்தோஷமாதான் இருக்கிறோம். அமைதியா வாழுறோம்.

பிரிஞ்சிருந்தாலும் பெற்றோர் என்கிற கடமையில இருந்து என்னைக்கும் அவங்க தவறியது இல்ல. என் லைஃப்ல நான் எடுக்கிற எந்த முடிவுக்கும் இன்னமும் அவங்க பக்கபலமா இருக்குறாங்க. சொல்லப்போனால் குடும்ப உறவுகளோட அருமைய புரிஞ்சிக்க எனக்கு இதுவொரு வாழ்க்கைப்பாடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here