பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (35). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கஸ்தூரி வீட்டை பூட்டி விட்டு, தென்காசி பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று விட்டு இரவில் உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். மறுநாள் காலையில் இவரது வீட்டுக்கதவு உடைக்கப் பட்டிருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த கஸ்தூரி, வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, யாரோ மர்ம நபர்கள் இரவில் வீட்டுக் கதவை உடைத்து பீரோவில் இருந்த 14 கிராம் நகை, ரூ 8 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.