ஆய்க்குடி சித்தா மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் பூரண நலம்

1143
ayikudi-siddha-college
ayikudi-siddha-college

ஆய்க்குடி சித்தா மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் பூரண நலம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி முதல் சித்தா கோவிட் கேர் மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு படுக்கைகள் உள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு மூன்று வேளையும் கபசுர குடிநீர், மூலிகை தேநீர், நொச்சி குடிநீர் வழங்கப் படுகிறது.
‘உணவே மருந்து, மருந்தே உணவு’ எனும் சித்த மருத்துவத்தின் தாரக மந்திரத்தின் படி உணவுகள் வழங்கப் படுகின்றன.

உணவுகள் விவரம்:

உளுந்து சாதம், எள் துவையல், பருப்பு சாதம், கொத்தமல்லி துவையல், பிரண்டை துவையல், இஞ்சி துவையல், முருங்கைக் கீரை அடை, தூதுவளை கீரை அடை, மிளகு பொங்கல், மாப்பிள்ளை சம்பா அரிசி சாதம், முட்டை, இட்லி, தோசை, தினை லட்டு, ராகி தோசை, நவதானிய தோசை, கோதுமை தோசை, சம்பா புட்டு, சாம்பார், காய்கறி பொரியல், கூட்டு, சுண்டைவற்றல் குழம்பு, திப்பிலி ரசம், மிளகு ரசம், இஞ்சி ரசம், மிளகரனை ரசம், முடக்கற்றான் கீரை ரசம், வரகரிசி பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப் படுகின்றன. நெல்லிக்காய் ஜூஸ், கேரட் ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ், மாதுளம் ஜூஸ், வாழைப்பழம் போன்றவையும் வழங்கப் படுகின்றன.

இரவில் மிளகு, மஞ்சள்தூள், நாட்டுச் சர்க்கரை கலந்த (கோல்டன் மில்க்) பால் வழங்கப் படுகிறது. உள் மற்றும் புற மருத்துவம், உணவு முறைகள் மூலம் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ஆரோக்கிய பெட்டகம், அமுக்கரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் வழங்கப்படுகிறது. தினமும் ரத்த பரிசோதனை, வாரம் ஒருமுறை நுண்கதிர் படம் எடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் வெப்ப நிலை, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் தினமும் ஆய்வு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளும் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

தென்காசி சிட்டி நியூஸ் நாளிதழை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்..

Tenkasi City News 1-4 26.09.2020

இதுவரை 1187 பேர் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் 1,092 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு தவிர்க்கப் பட்டுள்ளது. தற்போது 39 பேர் சிகிச்சையில் உள்ளனர். இத்தகவலை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உஷா, முதன்மை மருத்துவ அதிகாரி கலா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here