குற்றால அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி.. சுற்றுலாப் பயணிகள் குதூகலம்

1199

9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கோவில்கள், வணிக வளாகங்கள் என ஒவ்வொன்றாக திறக்க அனுமதி அளித்து வந்த அரசு, கடற்கரைகளுக்கும் அனுமதி வழங்கி விட்டது.

அதன் படி கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா, நீலாங்கரை, மகாபலிபுரம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், குற்றால அருவியில் மக்கள் குளிக்க தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.


காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றுக்கு செல்லலாம். ஒரே நேரத்தில் எத்தனை பேர் சென்றாலும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், சுற்றுலா பயணிகள் குறைந்தபட்சம் 2 மீட்டர் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை சுற்றுலாப் பயணிகள் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: குற்றாலம் தேனருவி நினைவலைகள்!

9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது சுற்றுலாப்பயணிகள், வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: 9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவி திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here