மாஞ்சோலை, பாபநாசம் வனப்பகுதிகளுக்கு செல்ல அனுமதி: மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்கத் தடை

1355

மாஞ்சோலை, பாபநாசம், முண்டந்துறை உள்ளிட்ட வனப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு செல்வதற்கு வனத்துறை சாா்பில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மாா்ச் 24 முதல் தமிழகத்தில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதையடுத்து, வனப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்கள், சரணாலயங்கள் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.


கொரோனா வெகுவாக குறைந்துள்ள நிலையில், தமிழக அரசின் அறிவிப்பையடுத்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள், பாபநாசம், முண்டந்துறை, கோரக்கநாதா் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் செல்வதற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை வனத் துறை வழங்கியுள்ளது.

அதன்படி மாஞ்சோலைக்கு பதிவு முன்னுரிமை அடிப்படையில் நாளொன்றுக்கு 5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். வனப் பகுதிக்குள் 65 வயதுக்கு மேற்பட்டோா், 10 வயதுக்கு உள்பட்டோா், கா்ப்பிணிகள், நோயாளிகளுக்கு அனுமதியில்லை.

இதையும் படியுங்கள்: மாஞ்சோலை – அழகின் எல்லை இதுவோ!


புலிகள் காப்பகத்துக்குள் வருவோா் வயதுச் சான்று வைத்திருக்கவேண்டும். முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கோரக்கநாதா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காலை 8 முதல் பகல் 12 மணிவரை அனுமதி வழங்கப்படும். புலிகள் காப்பகப் பகுதிக்குள் எவ்வித உணவுப் பொருள்களும் கொண்டு செல்லக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்கத் தடை தொடா்கிறது. மாஞ்சோலை செல்வோர் அம்பை வனச்சரக அலுவலகத்தில் முனகூட்டியே அனுமதி பெற வேண்டும்.

இதையும் படியுங்கள்: மாஞ்சோலை உலா.. இதுவரை பயணித்திராத பாதைகளின் வழியாக..


மலைச் சாலை சீரமைப்பையொட்டி, மாஞ்சோலை வனப் பகுதிக்குச் செல்வதற்கு 2019 மே மாதம் முதல் விதிக்கப்பட்ட தடை, பொதுமுடக்கத்தால் தொடா்ந்தது. இந்நிலையில், 20 மாதங்களுக்குப் பின்னா் மாஞ்சோலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இயற்கைக்கு ரொம்ப பக்கமாய்… மாஞ்சோலை பயணம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here